அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை
In ஆசிரியர் தெரிவு January 19, 2021 12:29 pm GMT 0 Comments 1659 by : Jeyachandran Vithushan

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ்.மாவட்டத்தில் உள்ள சர்வ மத தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் மத தலைவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இன்று யாழ்.ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.