அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ள கருத்து
In இலங்கை January 4, 2021 2:48 am GMT 0 Comments 1609 by : Yuganthini

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு நிச்சயம் எட்டப்படுமென நம்புவதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அரச நாளிதழொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் விடயம் பற்றி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் கதைத்திருக்கின்றேன்
வடக்கு மாகாண ஆளுநர் என்ற ரீதியில் அப்போது இருந்த அதிகாரிகளிடம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக கலந்துரையாடி இருக்கின்றேன்.
மேலும், இந்த விடயத்தை முக்கியமானதாகக் கருதுமாறும், அது நல்லிணக்க நடைமுறையை பலப்படுத்தும் என்றும் தெளிவுப்படுத்தி இருந்தேன்.
இது தொடர்பாக நாம் ஒரு நல்ல முடிவை எட்டவிருந்த நேரத்தில்தான் கடந்த வருடம் ஈஸ்டர் தின தாக்குதல் நடந்தது. அதன் பின் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டியதாயிற்று.
எனினும், ஏதாவதொரு வகையில் தீர்வு விரைவில் வரும் என்று நம்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.