அரசியல் கைதிகள் விவகாரம் – அரசாங்கத்தின் அணுகுமுறைகள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டிருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் எமது ஆதவன் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 2ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் இதனை எமது ஆதவன் செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஏதுவாக உள்ள காரணங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.