அரசை பாதுகாக்க நினைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைக் கண்டிக்கின்றோம் :அ.அமலநாயகி

வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போன உறவுகளின் விடயத்தில் தென்பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசுக்கு சார்பாக செயற்படுவதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “தென்னிலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவது தொடர்பாக, காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் கலந்துரையாடுவதாகத் தெரிவித்து வருகின்றமையை கண்டிக்கின்றோம்.
சிங்கள அரசாங்கமானது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்னும் பெயரில் நீதி விசாரணை செய்யவோ, தண்டனை வழங்கவோ அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கியுள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் படையினருக்கு எதிரான விசாரணையை மேற்கொள்ளமாட்டோம் எனவும் இரகசிய தடுப்பு முகாம்களில் யாரும் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அரசாங்கத்திற்கு மேலம் அவகாசம் வழங்குவதானது எமக்கான நீதியினை பெற்றக் கொள்வதில் தாமதத்தினை ஏற்படுத்தும். சர்வதேச நீதி விசாரணைகள் வேண்டும் என்பதே எமது கருத்தாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.