அரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்து
In இங்கிலாந்து May 7, 2019 4:23 am GMT 0 Comments 2472 by : Risha

பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய ஆண் வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மார்கிள் தம்பதியருக்கு நேற்று (திங்கட்கிழமை) ஆண் குழந்தை பிறந்தது.
ஹரி – மேகன் தம்பதியரின் வாரிசு அரச குடும்பத்தின் அரியணைக்குரிய ஏழாவது வாரிசாகும்.
இந்நிலையில், பிரித்தானிய அரச குடும்பத்தின் புதிய வாரிசின் பிறப்புக் குறித்து அறிந்து மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமா தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் தெரேசா மே மற்றும் தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் ஆகியோரும் அரச தம்பதியருக்கு தமது வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன், அமெரிக்காவின் பிரபலங்கள் மற்றும் புகழ்பூத்த நட்சத்திரங்களும் ஹரி – மேகன் தம்பதியருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.