அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி!

அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
அரச தனியார் ஒத்துழைப்பிற்கான தேசிய நிறுவனம், திறைசேறி செயலகம், செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளைக் கொண்ட ஆலோசனை சபையுடனும் சுமார் 20 பேரைக் கொண்ட பணியாளர் சபையொன்றைக் கொண்ட நிதியமைச்சின் அலகாக செயல்படுகிறது.
இந்த நிலையில் அரசாங்கத்தினால் தமது செயற்பாட்டை முறையாக முன்னெடுப்பதற்கும் பணிகளை ஒன்றிணைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனால் குறித்த அலகினால் முன்னெடுக்கப்படும் கடமைகள் தேவை இல்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நிறுவனத்தை மூடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக திறைசேறி செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.