அரச வேலைவாய்ப்புக்கு பணம் அறவிடும் மோசடிக்காரர்கள் குறித்து விழிப்பாயிருங்கள்

அரச வேலைவாய்ப்புக்கு பணம் அறவிடும் மோசடிக்காரர்கள் குறித்து விழிப்பாயிருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையில், ‘ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் வேலையற்ற இளைஞர்கள் யுவதிகளுகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்க பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் இவ் வேலைத்திட்டத்தினை சில மோசடிக்காரர்கள் தமது சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பிழையாக வழிநடத்தி வேலைபெற்று தருவதாக பணம் பறிக்கும் ஏமாற்று வேலைகளை செய்து வருவதாக அறிய கிடைத்துள்ளது.
இவர்கள் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், ஜனாதிபதியின் இணைப்பாளர்கள், கட்சி அமைப்பாளர்கள் எனும் தோரணையில் இவ் வேலைகளை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனை எமது அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளதோடு இவ்வாறானவர்களை எமக்கு அறியத் தருமாறும் கோருகின்றோம்.
கடந்த அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை இந்த அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் இவ்வேளையில் படித்த தகுதியுள்ளவர்கள் பயனடையவுள்ள இவ்வேளையில் தயவு செய்து இவ்வாறான மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.