அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கொடியசைத்து ஆரம்பித்து வைத்த இபிஎஸ் : ஓபிஎஸ்!

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தனர்.
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது.
போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டியில் பங்கேற்பதற்காக காளை உரிமையாளர்கள் நேற்று மாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காயமடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க 2 கால்நடை அம்பியூலன்ஸ்கள் மற்றும் பத்து 108 அம்பியூலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதிக மாடுகளை பிடித்து வெற்றி பெறும் வீரருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
உலகமே வியக்கத்தக்க அளவிற்கு இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வழி வகுத்து கொடுத்தது அதிமுக அரசுதான் என்று முதல்வர் பழனிசாமி இன்றைய தினம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.