அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை!
அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வு பிரிவினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் – கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் – கொய்தா கருதப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்த தீவிரவாத அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது. எனினும் அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா கொல்லப்பட்ட பின் அந்த அமைப்பு வலுவிழந்தது. இதற்கிடையே ஐ.எஸ் அமைப்பும் எழுச்சி பெற்றது.
கடந்த சில வருடங்களாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தினாலும், அமைதியாக அல் – கொய்தா அமைப்பு மெல்ல வலுபெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிராந்திய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.