அழகிரியின் அமைதிப்பேரணி குறித்து பேச விரும்பவில்லை: துரைமுருகன்

மு.க.அழகிரியின் அமைதிப்பேரணி குறித்து தான் எதுவும் கூற விரும்பவில்லை என்று, தி.மு.க. பொருலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித் அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறிய அவர்,
“இன்று இடம்பெறும் குட்கா ஊழல் தொடர்பான சோதனைகள் எப்பொழுதோ நடந்திருக்க வேண்டியது எனக் கூறினார்.
அத்துடன் தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்த பொதுக்குழு, செயற்குழு, தி.மு.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். இதை போல மற்ற மாவட்டங்களிலும் நிதி வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் குட்கா சம்பந்தமாக சோதனை நடத்த வேண்டும். இது தாமதமானது தான் என்றாலும் வரவேற்க்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.