அவசரகாலச் சட்டம் அமுலில்! – ஊரடங்குச் சட்டம் நீக்கம்
In ஆசிரியர் தெரிவு April 23, 2019 12:54 am GMT 0 Comments 2647 by : Varshini
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தளர்த்திக்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
கடந்த ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 290இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர். தொடர்ச்சியாக நேற்றும் பல இடங்களில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.