அவசரகால சட்டம் தொடர்பான யோசனை நாடாளுமன்றில் முன்வைப்பு!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
அந்த யோசனை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.