அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு: முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டது
In அவுஸ்ரேலியா January 3, 2021 3:38 am GMT 0 Comments 1724 by : Jeyachandran Vithushan

அவுஸ்ரேலியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸில் புதிதாக 8 பேருக்கும் அண்டை மாநிலமான விக்டோரியாவில் 3 புதிய நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டிசம்பர் நடுப்பகுதியில் நியூ சவுத் வேல்ஸில் கொரோனா தொத்தணி ஆரம்பித்த நிலையில் கால் மில்லியன் மக்கள் ஜனவரி 9 வரை கடுமையான முடக்க கட்டுப்பாடுகளின் கீழ் இருந்தனர்.
இருப்பினும் நகரின் மேற்கில் வேறுபட்ட கொரோனா தொற்று உறுதியான 13 பேர் இதுவரை அடையாளம் கண்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உள்ளக விளையாட்டு அரங்கு, முடி வெட்டும் கடைகள் போன்ற உட்புற இடங்களில் முக்கவசங்களை அணிவதை நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
அத்தோடு இந்த கடுமையான நடைமுறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைகளை மூடி முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுதி பரவலான பரிசோதனை மற்றும் சமூக விலகலை கடைப்பிடிக்க அதிகாரிகள் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையைத் தொடர்ந்து தொற்றின் மோசமான நிலையை அவுஸ்ரேலியா தவிர்த்துள்ளது.
அதன்படி இதுவரை அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவராவ் 28 ஆயிரத்து 450 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் 909 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை விக்டோரியாவில் 30 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பொது இடங்களில் ஒன்று கூடத் தடை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் உடனான எல்லைகளை மூடி நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.