அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு இரு துணைத் தலைவர்கள் நியமனம்!
In கிாிக்கட் September 27, 2018 2:15 pm GMT 0 Comments 1318 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஹசில்வூட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலிய அணிக்கு தலைவராக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும், துணைத் தலைவராக இருந்த டேவிட் வோர்னரும். தென் ஆபிரிக்காவிற்கு எதிரான கேப் டவுன் டெஸ்டின்போது பந்தை சேதப்படுத்திய புகாரில் இருவரும் சிக்கினார்கள்.
இந்த புகாரை விசாரித்த அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் தலா ஓராண்டு தடை விதித்தது.
இதனால் அவ்வணியின் தலைவர் பொறுப்பிற்கு டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார். ஆனால் துணை தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை.
இந்நிலையில், அவுஸ்ரேலிய அணி ஐக்கிய அரபு இராஜ்யத்தில் நடைபெறவுள்ள ஒக்டோபர் மதம் 7 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான அணியின் துணைத் தலைவர் பதவிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வூட் மற்றும் சகலதுறை வீரரான மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.