‘அவெஞ்சர்ஸ்’ திரைப்பட நடிகருக்கான சம்பளம் வெளியீடு
In சினிமா May 3, 2019 5:40 am GMT 0 Comments 1744 by : adminsrilanka

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ திரைப்படத்தின் மூலம் ரொபர்ட் டவுனி ஜூனியருக்கு ஒட்டுமொத்தமாக 521 கோடியே 70 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஹொலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அயன் மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ரொபர்ட் டவுனி ஜூனியருக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான இரசிகர்கள் இருக்கின்றார்கள். இவர் ஹொலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘அயன் மேன்’ படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரொபர்ட் டவுனி ஜூனியர் தனது சம்பளத்தை 10 மில்லியன் டொலராக உயர்த்தினார். அத்துடன்படத்தின் ஒட்டுமொத்த இலாபத்தில் 2.5 சதவீதம் சம்பளமாக கிடைக்கும்படி ஒப்பந்தம் செய்துகொண்டார்.
அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மூலம் ரொபர்ட் டவுனி ஜூனியருக்கு ஒட்டுமொத்தமாக 75 மில்லியன் டொலர் சம்பளம் கிடைத்திருப்பதாக அமெரிக்காவின் ‘ஹொலிவுட் ரிப்போர்ட்டர்’ பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் உலகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அண்மையில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ 7 நாட்களில் சுமார் 9,000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் 4ஆம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி சாதனை படைத்து வருகின்றது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியலில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகமாகும்.
இத்திரைப்படத்தில் அயன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், ஸ்பைடர்-மேன் என பல அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோக்கள் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.