அஷ்டமி திதியில் பைரவர் விரத வழிபாடு

ஸ்ரீ பைரவருக்குப் பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
காலபைரவர் அல்லது மார்த்தாண்ட பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது உகந்தது. தொடர்ந்து எட்டு அஷ்டமியில் இந்த பைரவரை விரதம் இருந்து வழிபட்டு வந்தால் இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம். அடகுவைத்த நகைகளை திருப்பும் வாய்ப்பும் கிட்டும்.
தேனும், பாலும் கலந்து பைரவருக்கு அபிஷேகம் செய்தால் எதிர்ப்புகள் அகலும். பொதுவாக அஷ்டமி திதியில் பைரவரை விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். செவ்வாய்க் கிழமை தீபமேற்றி வழிபட்டால் வராத கடன்கள் கூட வசூலாகும். வாழ்க்கை வளமாகும்.
இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.
தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.