அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி: இந்தியா-அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
In விளையாட்டு March 9, 2018 6:58 am GMT 0 Comments 1814 by : Vithushagan

அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
6 அணிகள் பங்கேற்றுள்ள 27ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா-அவுஸ்ரேலிய (பகல் 1.35 மணி), இந்தியா-அயர்லாந்து (மாலை 3.35 மணி), இங்கிலாந்து-மலேசியா (மாலை 6.05 மணி) அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்ற உலக சம்பியன் அவுஸ்ரேலிய அணி 12 புள்ளிகளுடன் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. அயர்லாந்து அணி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது.
கடைசி லீக் ஆட்டம் அனைத்தும் இறுதிப்போட்டி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடியது என்பதால் எல்லா அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.