அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது ; காவல்துறை அறிக்கை!
In இந்தியா February 8, 2021 5:52 am GMT 0 Comments 1346 by : Krushnamoorthy Dushanthini

அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும் தமிழகத்திற்குள் 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி உட்கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், “ தற்போது உள்ள கோவிட் -19 மற்றும் சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு காவல் சட்டம் அமலில் உள்ளதால் கீழ் கண்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமதி சசிகலா அவர்களின் வாகனத்தின் பின்பு 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வரவேண்டும். அதிமுக கட்சியினர் இதர வாகனங்கள் பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. சசிகலா உள்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும்.
ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள இடத்தில் உள்ள 10 சதவீத அளவு சீருடை அணிந்த தொண்டர்கள் மட்டுமே நிறுத்திக்கொள்ளவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.