அ.ம.மு.க தேர்தல் வேட்பாளர்களுக்கு பரிசுபெட்டி சின்னம் ஒதுக்கீடு!
In இந்தியா April 25, 2019 4:01 am GMT 0 Comments 2844 by : Krushnamoorthy Dushanthini
சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு 7 ஆவது கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டக சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுதேர்தல், இடைத்தேர்தலில் அ.ம.முகவை சேர்ந்த 59 வேட்பாளர்களுக்கும் பொதுசின்னம் ஒதுக்கப்பட வேட்டுமென தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி குறித்த கட்சிக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், இந்த தொகுதிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.