ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: முக்கிய நான்கு அணிகளின் விபரங்கள்
ஆசியாவின் ஆறு பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது.
அபுதாபி மற்றும் டுபாய் என இரண்டு மைதானங்களிலும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 13 போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதிப்போட்டி டுபாயில் நடைபெறுகின்றது.
இத்தொடரில், மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கு நேரடியாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன. எனினும் மீதமுள்ள ஒரு அணி தகுதி சுற்று போட்டிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படும்.
தகுதி சுற்று போட்டியில், ஹொங்கொங், மலேசியா, நேபாளம், ஓமான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதில் முதலிடம் பெறும் அணி, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இறுதி ஐந்து அணிகளில் ஆறாவது அணியாக இணைந்துக் கொள்ளப்படும்,
இதன்படி தற்போது இத்தொடருக்காக ஏ, பி என இரு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவது அணியாக தகுதி சுற்றில் முதலிடம் பெறும் அணி இணைத்துக்கொள்ளப்படும்.
பி’ பிரிவில் பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இரு பிரிவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அவற்றில் இருந்து இரு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும்.
இந்நிலையில் இத்தொடருக்கான தயார்படுத்தல்களை தற்போது ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதற்கமைய தற்போது வரை இத்தொடருக்கான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சரி! தற்போது இத்தொடரில் விளையாடப்போகும் அணி விபரங்களை விரிவாக பார்க்கலாம்…
———————————————————————————————————————————————————————————————————
முதலாவதாக இலங்கை அணியின் விபரங்களை பார்க்கலாம்…
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணியில், குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணத்திலக்க, திசர பெரேரா, தசுன் சானக்க, தனசஞய டி சில்வா, அகில தனஞ்சய, தில்ருவான் பெரேரா, அமில அபொன்சோ, கசுன் ராஜித, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, லசித் மாலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலதிக வீரர்களாக, நிரோஷன் திக்வெல்ல, ஷெஹான் மதுஷங்க, லக்ஷான் சந்தகன், நுவன் பிரதீப், ஷெஹான் ஜயசூரிய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
———————————————————————————————————————————————————————————————————
இந்திய அணி விபரங்களை அடுத்து பார்க்கலாம்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், சிக்கர் தவான், லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், மஹேந்திர சிங் டோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷார் பட்டேல், புவ்னேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, சர்துல் தாகுர், கலீல் அஹ்மட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
———————————————————————————————————————————————————————————————————
அடுத்து, பாகிஸ்தான் அணி விபரங்களை பார்க்கலாம்…
சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், பர்கர் சமான், சொஹைப் மலிக், மொஹமட் ஆமிர், ஷதாப் கான், இமாமுல் ஹக், ஷான் மசூத், பாபர் அஸாம், ஆசிப் அலி, ஹரிஸ் சொஹைல், மொஹமட் நவாஸ், பாஹிம் அஷ்ரப், ஹசன் அலி, ஜுனைத் கான், உஸ்மான் ஷின்வாரி, ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
———————————————————————————————————————————————————————————————————
அடுத்து பங்களாதேஷ் அணி விபரங்களை பார்க்கலாம்…
மஷ்ரபி மோர்டாசா தலைமையிலான பங்களாதேஷ் அணியில், சகிப் ஹல் ஹசன், தமீம் இக்பால், மொஹமட் மிதுன், லிட்டான் தாஸ், முஸ்தாபிகுர் ரஹீம், அரிஃபுல் ஹக், மொஹமதுல்லா, மொஹசெடக் ஹொஸைன், நாஸ்முல் ஹொஸைன், மெயிடி ஹசன் மிராஸ், நாஸ்முல் இஸ்லாம், ரூபல் ஹொசைன், முஸ்தாபிஜூர் ரஹ்மான், அபு ஹைடர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இத்தொடரின் முதல் போட்டி, செப்டம்பர் 15ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.