ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிப்பது குறித்த பதிவுகளை நீக்க தீர்மானம்!

மியன்மாரில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பதிவுகளை தடுக்க முகப்புத்தக நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இராணுவம் ஆட்சியை ஆதரிக்கும் அல்லது ஆட்சிக்கவிழ்ப்பை ஆதரிக்கும் இடுகைகளை கவனிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது, பொலிஸாரினால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய முடிவை முகப்புத்தக நிறுவனம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் மியன்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்கவும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயத்தில் அமெரிக்காவை பின் தொடரவும் ஐ.நா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.