முன்னாள் அமைச்சர்கள் ஆணைக்குழுவில் முன்னிலை
In இலங்கை June 26, 2020 4:36 am GMT 0 Comments 1736 by : Yuganthini

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.
அவன்கார்ட் நிறுவன விவகாரம் தொடர்பாக சாட்சியம் வழங்குவதற்காகவே இவர் ஆணைக்குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகியுள்ளனர்.
அவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நிசங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இவ்விடயம் தொடர்பாக சாட்சியம் வழங்குவதற்காக கடந்த 23ஆம் திகதியும் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே மீண்டும் இன்று முன்னிலையாகுமாறு அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
அவன்கார்ட் நிறுவன விவகாரத்தில் குறித்த 4பேர் உள்ளிட்ட 17 பேர் இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.