ஆண்டின் அழகாக உடையணியும் பெண்ணாக சசெக்ஸ் சீமாட்டி!
In இங்கிலாந்து September 6, 2018 4:44 am GMT 0 Comments 1656 by : Risha
சசெக்ஸ் சீமாட்டி மேர்கன் மார்க்கல், 2018ஆம் ஆண்டின் சிறந்த முறையில் உடையணியும் பெண் என்ற பெருமை பெற்றுள்ளார்.
பிரபல வெளியீடான மக்கள் சஞ்சிகையின் தரப்படுத்தல் பட்டியலில் சசெக்ஸ் இளவரசர் ஹரியின் பாரியார் முதலிடம் பெற்றுள்ளார்.
ஹொலிவுட் நடிகைகளான கேட் பிளாஞ்செட், சண்ட்ரா புல்லக் மற்றும் அமெரிக்க மொடல் அழகியும் நடிகையுமான கிம் கடார்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்த சிறந்த முறையில் உடையணியும் பெண்களுக்கான தரப்படுத்தலில் மேகன் மார்க்கல் முதலிடம் பெற்றுள்ளார்.
”இதற்கு முன்னர் இப்பட்டியலில் அரச குடும்பத்தினரோ அல்லது ஹொலிவுட் துறைக்கு அப்பாற்பட்டவர்களோ இணைத்துக் கொள்ளப்பட்டதில்லை. ஆனால், உடையலங்கார பாணி என வரும்போது தற்போது அதில் மேகன் மார்க்கலை இணைத்துக் கொள்ளாது இருக்க முடியாது” என குறித்த சஞ்சிகையின் மக்கள் உடையலங்காரம் மற்றும் அழகு பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியர் அன்ட்ரியா லவிந்தால் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.