ஆப்கானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த 16பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை முகாம் மீது நேற்றிரவு (வியாழக்கிழமை) திடீரென நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலின் போது படுகாயமடைந்த இருவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கான் அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வந்தபோதிலும் ஒருபுறம் தாக்குதல்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.