ஆப்கானிஸ்தானின் முக்கிய மாவட்டத்தை கைப்பற்றும் மோதல் – 37 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்லான் மாகாணத்தில் உள்ள புர்கா மாவட்டத்தை கைப்பற்ற முயன்ற தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுவருகிறது.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆரம்பித்த இந்த மோதிலில் பாதுகாப்புப் படையினர் 7 பேரும், 30 தலிபான்களும் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, பயங்கரவாதிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் இராணுவம் மற்றும் பொலிஸார் கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.