ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி – 64 தீவிரவாதிகள் உயிரிழப்பு!
In உலகம் April 21, 2019 4:18 pm GMT 0 Comments 2284 by : Krushnamoorthy Dushanthini

ஆப்கானிஸ்தானில் மூன்று மகாணங்களில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 64 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு காஸ்னியில் 7 பயங்கரவாதிகளும், டக்கார் மாகாணத்தில் 5 பயங்கரவாதிகளும், ஸாபுல் மாகாணத்தில் 28 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வர்டாக் மாகாணத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தெற்கு உருஸ்கான் மாகாணத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களை குறிவைத்து இராணுவம் மற்றும் பொலிஸார் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.