UPDATE : ஆப்கான் தலைநகரை உலுக்கிய வெடிப்பு: ஒன்பது பேர் காயம்

ஆப்கான் தலைநகரை உலுக்கிய வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், அங்கு தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஆப்கான் சட்டமா அதிபரின் அலுவலகத்தை அண்மித்த பகுதியில், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் சர்வதேச அமைப்பொன்றே இதன்போது இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக உட்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் தலைநகரில் பாரிய வெடிப்பு
ஆப்கான் தலைநகர் காபுலில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளமையை பொலிஸார் உறுதிபடுத்தியுள்ள போதிலும், மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தை தொடர்ந்து வெடிப்பு இடம்பெற்ற பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்துள்ளது. எனினும், உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.