ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய செயலிகள் – மென்பொருள் விபரம்
In அறிவியல் May 7, 2019 9:55 am GMT 0 Comments 4804 by : adminsrilanka

ஆப்பிள் நிறுவனம் புதிதாக செயலிகள், மென்பொருட்களை அறிமுகம் செய்யவுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறயிருக்கும் மென்பொருள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் Development Tools ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் கொண்டிருக்கும் தொடர்பினை வலிமைப்படுத்துகின்றது.
ஆப்பிள் நிறுவனத்தின் International Developers மாநாடு ஜூன் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், ஐ மக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டி.வி. உள்ளிட்டவற்றை இயக்கும் இயங்குதளங்களை Update செய்கின்றது. இவற்றில் ஐபோன் செயலிக்கான Maps, Remainders, Messaging போன்றவற்றை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தவுள்ளது.
இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனினும் புதிய Update இன் மூலம் பயனர்கள் Apple Music, விரைவில் வெளியாக இருக்கும் டி.வி. பிளஸ் வீடியோ Streaming சேவை உள்ளிட்ட புதிய சேவைகளை இயக்க முடியும்.
அந்தவகையில் 2007 இல் புதிய ஐபோன் அறிமுகம் செய்தது முதல் ஆப்பிள் நிறுவனம் தனது Mobile இயங்குதளங்களை ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.