ஆரம்பகால தடுப்பூசிகளுக்கான திட்டத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு முன்னுரிமை இல்லை!

வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாற்றியமைத்துள்ளார்.
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் முதல்நபர்களில் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களும் இருப்பார்கள் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.
ஆனால், தற்போது அந்த திட்டத்தில் ட்ரம்ப், மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ட்ரம்ப் ஏன் திட்டங்களை மாற்ற முடிவு செய்தார், அல்லது உயர் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததையடுத்து இன்று முதல் அமெரிக்காவில் தடுப்பூசி போடப்படுகின்றது. இந்த தடுப்பூசி 95 சதவீதம் வரை பாதுகாப்பை வழங்குகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.