ஆராதனைகளை வீடுகளில் இருந்து மேற்கொள்ளுமாறு கோரிக்கை
In இலங்கை April 28, 2019 2:36 am GMT 0 Comments 2681 by : Dhackshala

நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் வீடுகளிலிருந்து இன்றைய ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்தம் இலங்கை மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்களே தினமும் அரங்கேறியவண்ணமுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்தனர். தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருப்பலி ஆராதனைகள் கிறிஸ்தவ ஆலயங்களில் ஒப்புக்கொடுக்கப்படும். இந்த ஆராதனையில் மக்கள் கலந்துகொள்வார்கள். எனவே நாட்டில் தற்போதுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு வீடுகளிலிருந்தே இன்றைய ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.