ஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்
In இந்தியா April 19, 2019 11:23 am GMT 0 Comments 2456 by : Yuganthini
தேர்தல் சட்டவிதிப் பிரகாரம் ஆறு சதவீதமான வாக்குகளை பெற்றுக் கொண்டால் மட்டுமே அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியுமென தமிழக மீன்பிடி வள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் தனது அ.ம.மு.க.யினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு எடுத்துவரும் முயற்சி குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜெயக்குமார் இதனை குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அ.ம.மு.க.யினால் 1 சதவீதம் அல்லது 2 சதவீதம் வாக்குகளை மாத்திரம்தான் பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் அ.ம.மு.க கடைசி வரை குழுவாக மட்டுமே செயற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவே ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.