ஆலயங்களில் இருக்கும் கருடனின் தோற்றம்

ஆலயங்களில் இருக்கும் கருடன், இரண்டு பெரிய இறக்கைகளுடன், மனிதனின் தேக உருவம் கொண்டு, வளைந்த மூக்குடன் கூடி முகத்தோற்றத்தில் பெருமாளின் எதிரில் காட்சி தருவார்.
முகத்தில் பெரிய மீசை, இருக்கும். உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார்.
பெருமாளை தோளில் சுமந்து வருவதுபோல அமர்ந்த நிலையில், ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். கருடனின் இரு பெரும் சரங்கள், பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியபடி இருக்கும்.
நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகத கல்லை அணிந்திருப்பார்.
இந்த அணிகலனுக்கு ‘கருடோத்காரம்’ அல்லது ‘கருடமணி’ என்று பெயர். இதன் ஒளி பாம்புகளை ஒடுங்கச் செய்துவிடும். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே, இப்படி மரகதமணியாக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.