ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!
In இலங்கை December 26, 2020 5:25 am GMT 0 Comments 1362 by : Yuganthini
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் (சனிக்கிழமை) 16ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி, இலங்கை வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.
குறித்த அனர்த்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.
ஹற்றன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் ஹற்றன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் ஹற்றன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில், ஹற்றன் நகரிலுள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.