ஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு!
In ஆசிரியர் தெரிவு October 16, 2018 4:56 am GMT 0 Comments 1744 by : Benitlas

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் ஆழ்துளைக்கிணறு அமைத்து அளவுக்கதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால் விவசாயக்கிணறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் தமது விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
வருடத்தில் பன்னிரண்டு மாதங்களும் பயிர்செய்யக்கூடிய தமது நிலங்;களில் தற்போது பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக்கிணற்றிலிருந்து அளவுக்;கதிகமாக நீர் பெறப்படுவதனால் ஏனைய கிணறுகளின் நீர்மட்டம் மிக வேமாக குறைவடைந்துள்ளது.
அண்மைய நாட்களாக இந்த பிரதேசங்களில் காணப்பட்ட கிணறுகளில் முழுயைமாக நீர் வற்றியுள்ளதால் விவசாய செய்கையை பாதுகாப்பதற்காக மேலும் கிணறுகளை ஆழப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலமை தொடருமேயானால் குறித்த பகுதியினை விட்டு முழுமையாக இடம்பெயர வேண்டிய ஒரு நிலை எதிர்காலத்தில் ஏற்;படும் எனவும் பிரதேச மக்கள் தெரித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.