ஆஸி அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு அபராதம்!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், விளையாடிய இந்தியக் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை, அபராதம் விதித்துள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்கள், 50 ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சிட்னி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.