இங்கிலாந்தின் மனிதஉரிமைகள் அணுகுமுறை குறித்து ஐ.நா குழு விசாரணை!
In இங்கிலாந்து May 7, 2019 9:59 am GMT 0 Comments 2213 by : shiyani

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான குழுவினால் இங்கிலாந்தின் மனிதஉரிமைகள் மீதான அணுகுமுறை தீவிரமான சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இன்று ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தின் இங்கிலாந்தின் குடியேற்ற தடுப்பு, விசாரணை மற்றும் சிறைச்சாலை இடநெருக்கடி குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ளது.
குடியேறிகளுக்கு எதிரான கொள்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளையடுத்தே இங்கிலாந்தின் மனித உரிமைகளின் தரங்கள் மீதான இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான அணுகுமுறை அல்லது தண்டனைக்கு எதிரான ஐ.நாவின் கொள்கைக்கு ஒப்புதலளித்த நாடுகள் அக்கொள்கையை பின்பற்றுவது தொடர்பாக மதிப்பிடுவதே இக்குழுவின் பணியாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கொள்கைக்கு 1988 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஒப்புதலளித்திருந்தது.
இக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக்கையின்படி ஐ.நாவின் கொள்கைக்கு எதிராக இங்கிலாந்து செயற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.