இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்கள் வெற்றி இலக்கு !
In விளையாட்டு January 17, 2021 11:12 am GMT 0 Comments 1861 by : Jeyachandran Vithushan

காலியில் இடம்பெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 359 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணிசார்பாக லஹிரு திரிமன்னே 111 ஓட்டங்களையும் குசல் பெரேரா 62 ஓட்டங்களையும் மத்தியூஸ் 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜாக் லீச் 4 விக்கெட்களையும் டொமினிக் பெஸ் 3 விக்கெட்களையும் சாம் கர்ரன் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்னும் ஒரு நாட்கள் மீதமுள்ள நிலையில் 74 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.