இங்கிலாந்து- வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை
In இங்கிலாந்து December 3, 2020 6:12 am GMT 0 Comments 1838 by : Anojkiyan

புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை விதிக்கப்படும்.
சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் யூஸ்டிஸ், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளிலிருந்து பிரெக்சிட் பிந்தைய முறிவில் இந்த தடை அமுலில் இருக்கக்கூடும் என கூறினார்.
ஆர்எஸ்பிசிஏ இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. இது விலங்கு நலனுக்கான ஒரு முக்கிய சாதனை என்று கூறியது.
ஆனால், பெரிய மாற்றங்கள் இங்கிலாந்தின் உணவு விநியோகச் சங்கிலியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரித்தது.
இந்தத் திட்டம் குறித்து அரசாங்கம் எட்டு வார ஆலோசனையைத் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்திற்குள் லொரிகளில் விலங்குகள் செலவழிக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கும்.
சீர்திருத்தங்களின் தொகுப்பு அடுத்த கோடையில் நாடாளுமன்றத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.