இடத்தைப் பிடித்தே தீருவேன் – நாயகியின் சபதம்
In கிசு கிசு October 5, 2018 10:25 am GMT 0 Comments 1218 by : Ravivarman

தமிழில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஒருவர் நம்பர் 1 நடிகையின் இடத்தைப் பிடித்தே தீருவேன் என்று சபதம் செய்திருக்கிறராம்.
தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு சமமாக வலம் வருகிறாராம் கோலமாவு நடிகை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை, அதில் பல வெற்றிகளையும் பெற்று வருகிறாராம்.
இந்நிலையில், இந்த நடிகைக்கும், மோகினியான மூன்றெழுத்து நடிகைக்கும் ஆரம்பத்தில் இருந்தே தொழில் போட்டி இருக்கிறதாம். அத்துடன், இருவரும் ஒரு ‘பார்ட்டி’யில் சந்தித்துக் கொண்டார்களாம். அதில் இருவரும் மனம் விட்டு பேசி தோழிகளாக மாறிவிட்டார்களாம்.
இருப்பினும் இருவரிடமும் சத்தமே இல்லாமல் தொழில் போட்டி இருந்து வருகிறதாம். நம்பர் 1 நடிகையின் நட்சத்திர அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவது, மூன்றெழுத்து நடிகைக்கு பிடிக்கவில்லையாம். இதனால், நம்பர் 1 இடத்தை எப்படியாவது பிடித்தே தீருவேன் என்று மூன்றெழுத்து நடிகை சபதம் எடுத்து இருக்கிறாராம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.