இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதிளுக்கான இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதி இடைத் தேர்தலின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வகையில், அரவக்குறிச்சி தொகுதியில் பா.க.செல்வம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யா, சூலூர் தொகுதியில் வெ.விஜயராகவன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ரா.ரேவதி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 4 தொகுதிகளுக்கும் 7ஆவது கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாளான மே மாதம் 19 ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.