இதயநோய் மற்றும் பக்கவாதத்திற்கு காரணமாகும் மாசடைந்த காற்று
In இங்கிலாந்து October 31, 2018 2:27 pm GMT 0 Comments 1555 by : shiyani

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு மாசடைந்த காற்று காரணமாக அமைகிறது என விஞ்ஞானிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தின் இறப்புகளில் ஐந்து சதவீதம் மாசடைந்த காற்றினால் ஏற்படுகின்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றைய நோய்களைப் போலவே மாசடைந்த காற்றும் உடலுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது எனவும் இவ்விடயம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டியது அவசியமெனவும் பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவில் காற்றின் தரம் 2010 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றமடைந்திருந்தாலும் மாசடைந்த காற்றின் காரணமாக உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்தும் அதிகரித்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் எனஅரசாங்க செய்தி தொடர்பாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் காற்று மாசடைதலைத் தடுப்பதற்காக அதிகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியம் எனவும் தீங்கு விளைவிக்கும் உமிழ்வைக் குறைப்பதற்காக £3.5 பில்லியன் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.