இத்தாலியில் புதிதாக 649 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !
In இத்தாலி December 13, 2020 5:28 am GMT 0 Comments 1790 by : Jeyachandran Vithushan

இத்தாலியில் நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி புதிதாக 649 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்தினம் அதாவது வெள்ளிக்கிழமை 761 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை புதிதாக நேற்று 19 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாகவும் முதல் நாளில் 18 ஆயிரத்து 727 ஆக பதிவாகியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் மேற்கத்திய நாடான இத்தாலி பெப்ரவரியில் கொரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து 64,036 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
இந்த எண்ணிக்கை பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.