இத்தாலியில் புதிய வகை கொரோனா வைரஸால் இருவர் பாதிப்பு!

இத்தாலியில் புதிய வகை கொரோனா வைரஸால் இருவர் பாதிக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரும் அவரது நண்பரும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரித்தானியாவில் இருந்து திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தீவிரமாக பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, துருக்கி, சவுதி அரேபியா, உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.
சுகாதார செயலாளர் மாற் ஹான்காக், வைரஸின் புதிய மாறுபாடு 70 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.