‘இந்துக்களின் கிரிக்கெட் சமர்’ ஆரம்பம்!
In இலங்கை March 9, 2018 6:00 am GMT 0 Comments 1366 by : Vithushagan

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் யாழ். இந்துக் கல்லூரிக்கும் இடையிலான ‘இந்துக்களிள் சமர்’ யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
இதுவரை நடந்துமுடிந்துள்ள 8 போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மூன்று தடவைகள் வெற்றிபெற்றுள்ளதுடன், யாழ். இந்துக் கல்லூரியினால் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது . நான்கு போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.