இந்தியாதான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது: பாகிஸ்தான்
In இந்தியா April 26, 2019 4:19 am GMT 0 Comments 2244 by : Yuganthini

எமது நாடு உண்மையாக அமைதியைதான் நேசிக்கின்றது. ஆனால் இந்தியாதான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றதென பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன்போது இந்தியாவும் அதற்கு பதிலடி வழங்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.
இந்நிலையில் நேற்று, (வியாழக்கிழமை) பாகிஸ்தான்- இஸ்லாமாபாத் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆரிப் ஆல்வி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பாகிஸ்தான் அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு தற்போது தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் அமைதியான முறையில் இந்தியாவை நாடுவதன் ஊடாக அனைவரும் அதனை புரிந்துக்கொள்ள முடியும்.
ஆனால் இந்தியாவின் செயற்பாடுகள் எமக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுடன் பயங்கரவாதத்தையே ஊக்குவித்து வருகின்றது.
இதேவேளை பாகிஸ்தான், கடுமையான உள்நாட்டு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தது. இந்நிலையில் அப்பிரச்சினைகளை கடந்து சுமூகமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றது” என ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.