இந்தியாவால் முக்கியமாகத் தேடப்படும் தீவிரவாதத் தலைவர்கள் சீனாவில் பயிற்சி – இந்தியா தகவல்

இந்தியாவால் அதிகம் தேடப்படும் நாகா பழங்குடியின தீவிரவாதத் தலைவர்கள் மூவர் உள்ளிட்ட நான்கு தீவிரவாதத் தலைவர்கள் சீனாவுக்குச் சென்றுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயிற்சிக்காகவும், ஆயுத உதவிக்காகவுமே இவ்வாறு சீனாவுக்கு கடந்த ஒக்டோபரில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின், குன்மிங் பகுதிக்கு குறித்த நான்கு தீவிரவாதத் தலைவர்களும் சென்றதாகவும், சீன இராணுவ அதிகாரிகளையும், இரு தரப்புக்கும் மத்தியஸ்தராகச் செயற்படும் பிரதிநிதியையும் சந்தித்ததாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, சீனாவால் ஆதரிக்கப்படும் மியான்மரிலுள்ள யூனைடெட் வா ஸ்டேட் ஆர்மி (United Wa State Army) மற்றும் அரகான் ஆர்மி (Arakan Army) ஆகிய இரு தீவிரவாதக் குழுக்கள், வடகிழக்கு இந்தியாவில் செயற்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுத விநியோகம் செய்வதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.