இந்தியாவில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 532 கிலோ மஞ்சள் கட்டிகள் தீயிட்டு அழிப்பு
In இலங்கை December 28, 2020 9:32 am GMT 0 Comments 1642 by : Yuganthini
இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு, மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று (திங்கட்கிழமை) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்சி முன்னிலையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக தலைமையில், பொலிஸ் தடவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து மன்னார் நகர சபைக்கு சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட சுற்று நிருபத்தின் அடிப்படையில் கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்களை உடனடியாக தீக்கிரையாக்கும் படியான அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்படி மஞ்சள் கட்டிகள் முதற்கட்டமாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
மன்னார், பேசாலை, தாழ்வுபாடு, தலைமன்னார் கடல் பகுதிகள் ஊடாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் கட்டிகளே மேற்படி அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.