இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட சோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும்
In இந்தியா February 23, 2021 8:46 am GMT 0 Comments 1141 by : Dhackshala

இந்தியாவிலேயே முற்றிலும் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் 3 ம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை ஒன்றாக சேர்த்து நடத்தியிருந்தால் கோவாக்சினின் திறன் திட்டமிட்டபடி நிரூபிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவித்த அவர், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது என தெரிவித்தார்.
கோவாக்சின் தடுப்பூசி, தென்னாப்பிரிக்க மரபணு மாற்ற வைரஸையும் கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்ற சீரம் இந்தியாவின் கொவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்ட கடந்த ஜனவரி 3 ஆம் தேதியே கோவாக்சினுக்கும் அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் 3 ஆம் கட்ட சோதனை நடக்காமல் ஒப்புதல் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.