இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் 17 இலட்சம் பேர் உயிரிழப்பு!
In இந்தியா December 24, 2020 5:34 am GMT 0 Comments 1420 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவில் காற்று மாசுவினால் கடந்த ஆண்டு மட்டும் 17 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சர்வதேச சுற்றுச்சூழல் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், “ இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவால் 40 விழுக்காடு மக்கள் நுரையீரல் நோய்களாலும் 60 விழுக்காடு மக்கள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் காற்று மாசு காரணமாக 17 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த இறப்பில் 18 விழுக்காடாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்று புள்ளி 4 விழுக்காடு இழப்புக்கும் வழிவகுத்தது.
காற்று மாசுபாட்டால் பொருளாதார இழப்பைச் சந்திப்பதில் வட மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. அவற்றுக்கான பட்டியலில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும் பிகாா் 2-ஆவது இடத்திலும் உள்ளது.
காற்று மாசுபாட்டால் உயிரிழந்தவா்களில் 40 சதவீதம் போ் நுரையீரல் தொடா்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனா். 60 சதவீதம் போ் இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.