இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – ஜவடேகர்
In இந்தியா December 15, 2020 2:35 am GMT 0 Comments 1366 by : Krushnamoorthy Dushanthini

கொரோனா தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவில் கிடைக்கும்.
தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படுவதற்கும் முன்பாக தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு இந்தியா தயாராகி வருவதால் மத்திய சுகாதார அமைச்சகம் அதன் செயற்பாட்டு வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.